`கார்ப்பரேட்டும் கவர்மென்ட்டும் சேர்ந்து வச்ச கொள்ளி!' - வரலட்சுமி சரத்குமாரின் `வெல்வட் நகரம்` டிரெய்லர் | Velvet Nagaram Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (23/11/2018)

கடைசி தொடர்பு:20:11 (23/11/2018)

`கார்ப்பரேட்டும் கவர்மென்ட்டும் சேர்ந்து வச்ச கொள்ளி!' - வரலட்சுமி சரத்குமாரின் `வெல்வட் நகரம்` டிரெய்லர்

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் `வெல்வட் நகரம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வெல்வட் நகரம்

அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம் `வெல்வட் நகரம் இந்தப் படத்தை மேக்கர் ஸ்டூடியோ அருண்கார்த்திக் தயாரித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரமேஷ் திலக், அர்ஜய், மாளவிகா சுந்தர், கஸ்தூரி, சந்தோஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ரமணி இசையமைக்க பகத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நடிகைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் படங்களின் வரிசையில் தற்போது வரலட்சுமியும் இணைந்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.