`அதே பார்வை... அதே திமிர்..!’ - அஜித் மகனை செல்லம் கொஞ்சிய ரசிகர்கள் | Ajith son's photo went viral

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (24/11/2018)

`அதே பார்வை... அதே திமிர்..!’ - அஜித் மகனை செல்லம் கொஞ்சிய ரசிகர்கள்

கோவாவிலிருந்து குடும்பத்துடன் சென்னைக்குத் திரும்பிய அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில், அஜித் மகன் இடம்பெற்றிருப்பதுதான் ஹைலைட்!  

அஜித் மகன்'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தை முடித்த நடிகர் அஜித், கடந்த 18-ம் தேதி குடும்பத்துடன் கோவா சென்றார். பட வேலைகள் முடிந்ததால், அஜித் குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக ஜாலி ட்ரிப் போனதாக அவரின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது. கோவாவுக்குப் புறப்பட்ட அஜித்தை சென்னை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் குஷியாகினர். புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.  இந்நிலையில், நேற்று அஜித் கோவாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்ததாகத் தெரிகிறது. வழக்கம்போல அஜித் ரசிகர்கள், விமான நிலையத்திலேயே அஜித்தை சூழ்ந்துகொண்டனர்.

அஜித்

அஜித் இதுவரை தன் மகனை பொது இடங்களுக்கு அழைத்துச்சென்றதில்லை. அஜித் மகனின் புகைப்படங்களும் இதுவரை சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை. ஆனால் இம்முறை, ரசிகர்கள் அஜித் மகனை புகைப்படம் எடுத்து, `அழகு குட்டிச் செல்லம்’ என்று கேப்ஷன் கொடுத்து, மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.  புகைப்படம் செம வைரல். 'அதே பார்வை... அதே திமிர்' என்று ரசிகர்கள் கமென்ட் செய்துவருகின்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க