கஜா புயல் பாதிப்பு - நடிகர் அஜித்குமார் செய்த உதவி! | actor ajith kumar contribute for cyclone gaja relief work

வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (25/11/2018)

கடைசி தொடர்பு:11:17 (25/11/2018)

கஜா புயல் பாதிப்பு - நடிகர் அஜித்குமார் செய்த உதவி!

கஜா புயல் நிவாரண நிதியாக நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார்.

அஜித்

'கஜா' புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெற்பயிர் என விவசாயப் பயிர்கள் புயலால் சாய்ந்துள்ளன. அதேபோல் ஆடு, மாடுகள் இறந்துள்ளன. மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

இதேபோல் திரைப் பிரபலங்களும் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். சிலர் நேரடியாகவும், சிலர் அரசாங்கத்தின் மூலமாகவும் உதவி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, விஜய், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உதவினர். இவர்களைப் போல் நடிகர் அஜித்குமாரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வழங்கியுள்ளார். ரூ.15 லட்சத்தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதனைத் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்தவர்கள் பெயரை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில், 23ம் தேதி நடிகர் அஜித் குமார் நிதி உதவி அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிவாரண நிதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க