`நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு' - ஹிட் அடிக்கும் `கனா’ ட்ரைலர்! | kanaa trailer released by aswin

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (25/11/2018)

கடைசி தொடர்பு:12:06 (25/11/2018)

`நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு' - ஹிட் அடிக்கும் `கனா’ ட்ரைலர்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் `கனா’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கனா ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் `கனா’. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றொரு நண்பர் திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்தில் வரும் `வாயாடி பெத்த புள்ள..’ என்ற பாடலை சிவகார்த்திகேயனும், அவரது மகள் ஆராதனா பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி செம வைரலாகியது.  

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை, இதுதான் திரைப்படத்தின் மையக் கதை. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதனை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டார். அதனுடன், ``விளையாட்டைப் பெண்கள் தங்கள் தொழிலாக எடுத்துக்கொள்ள இந்தப் படம் உத்வேகம் அளிக்கும். பெண்கள் கனவு காணவேண்டிய பெரிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார் அஸ்வின்.

இதற்கிடையே, ட்ரைலர் உள்ள காட்சிகள் உணர்வுபூர்வமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைத்துள்ளது ட்ரைலரில் தெரிகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க