`வில்லு' படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் விஜய் - நயன்தாரா! #Thalapathy63 அப்டேட்ஸ்! | vijay 63 movie update

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (25/11/2018)

கடைசி தொடர்பு:08:47 (26/11/2018)

`வில்லு' படத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் விஜய் - நயன்தாரா! #Thalapathy63 அப்டேட்ஸ்!

நயன்தாரா

சர்கார் படத்தைத்தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் அட்லி. விஜயின் 63-வது படமான இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறது.  படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரபூர்வ  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், படத்தில் விவேக், யோகி பாபு மற்றும் டேனியல் பாலாஜி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பை மேற்கொண்ட ரூபன் என அதே மெர்சல் கூட்டணி மறுபடியும் இணைந்திருக்கிறது.

ராஜா ராணி

 

 ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்குநராக அறிமுகமான 'ராஜா ராணி' படம் நயன்தாராவுக்கு கோலிவுட்டில் ரீ-என்ட்ரியாக அமைந்தது. 2009-ல் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான `வில்லு' படத்தில் நடித்த விஜய்- நயன்தாரா ஜோடி ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்ரெண்டாகி வரும் #thalapathy63 என்ற ஹேஷ்டேக் வைத்தே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.