`தூக்குதொரணா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி’ - விஸ்வாசம் மோஷன் போஸ்டர்! | Viswasam Official Motion Poster Released

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (25/11/2018)

கடைசி தொடர்பு:09:02 (26/11/2018)

`தூக்குதொரணா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி’ - விஸ்வாசம் மோஷன் போஸ்டர்!

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரீலிஸான சில நொடிகளிலே ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர்.

விஸ்வாசம்

 அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் இது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி மோஷன் போஸ்டர் ரீலிஸாகியுள்ளதால் ரசிகர்கள் திக்குமுக்காடியுள்ளனர். இருப்பினும் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்து வருகின்றனர். படம் பொங்கலுக்கு  ரீலிஸாவது குறிப்பிடத்தக்கது.