`நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா எதப் பத்திப் பேசுவாங்க..?’ - ‘மாயபிம்பம்’ டீசர் | Maayabimbum movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (26/11/2018)

கடைசி தொடர்பு:14:37 (26/11/2018)

`நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா எதப் பத்திப் பேசுவாங்க..?’ - ‘மாயபிம்பம்’ டீசர்

சூப்பர் காஸ்ட்டிங், பெரிய பட்ஜெட் எனப் பல ஹைஃபை படங்களே சொதப்ப, சத்தம் இல்லாமல் செம ஹிட் அடிக்கின்றன சிறுபட்ஜெட் படங்கள். அப்படி, ரிலீஸுக்கு முன்பே சினிமா ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களில் ஒன்றுதான் ’மாயபிம்பம்’. 

மாயபிம்பம்

அறிமுக இயக்குநர் சுரேந்தரின் இயக்கத்தில் இந்தப் படத்தில் நடித்த அனைவரும் புதுமுக நடிகர்கள்தானாம். இதுகுறித்து பேசிய சுரேந்தர், ``ஆகாஷ் பிரபு, ஹரிகிருஷ்ணன், ஜானகி, ராஜேஷ், அருண் குமார் இவங்கதான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்தப் படத்தோட கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னப்ப, ‘நான் பண்றேன். ஆனா, ஃபேமஸான நடிகர்களை வெச்சுப் பண்ணுங்க’னு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடிச்சாதான் நல்லாயிருக்கும். ஏன்னா, படம் பார்க்கிறவங்களுக்கு அவங்க கதாபாத்திரமா மட்டும்தான் தெரியணும். அதுக்காகவே நான் புதுமுகங்களை வெச்சுத்தான் படம் பண்ணணும்கிறதுல உறுதியா இருந்தேன். பல தயாரிப்பாளர்கள் அதுக்கு ஓ.கே சொல்லலை. அதான், நானே தயாரிப்பாளர் ஆயிட்டேன். நடிகர்கள் மட்டுமில்ல, இசையமைப்பாளர் நந்தா, கேமராமேன் எட்வின், எடிட்டர் வினோத்னு டெக்னிக்கல் டீமும் புதுசுதான்’’ என்றார்.

 

 

 

`மாயபிம்பம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. சிறு பட்ஜெட் படங்கள் சந்திருக்கும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல், ரிலீஸ் தேதி பஞ்சாயத்து என எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாயபிம்பம் சீக்கிரம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.