இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாகரன் பயோபிக்! | bobby simha will act as ltte leader prabhakaran

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (26/11/2018)

கடைசி தொடர்பு:20:13 (26/11/2018)

இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாகரன் பயோபிக்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பிரபாகரனின் 64-வது பிறந்தநாளான இன்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் 'சீறும் புலி' என்றும், அதில் பிரபாகரன் வேடத்தில் நடிகர் பாபி சிம்ஹா புலியுடன் உட்கார்ந்திருப்பது போல புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து, அப்படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் குமாரிடம் பேசினேன். 

பிரபாகரன்


"பாபி சிம்ஹாவை எனக்கு ஷார்ட் ஃபிலிம்மில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே தெரியும். பிரபாகரன் பயோபிக் எடுத்தால் அவரைத்தான் பிரபாகரனாக நடிக்கவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் இதை பாபியிடம் சொன்னவுடனே, அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார். பிரபாகரனைப் பற்றிய அடிப்படையான விஷயங்கள் பாபிக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னபோது, இன்னும் அவருக்கு அந்த கேரக்டரில் நடிக்க இன்னும் ஆர்வமாக இருந்தார். மாணவனாக இருந்த பிரபாகரன், எப்படி போராளியாக மாறுகிறார் என்பதை முதல் பாகமாகவும், போராளியான பிரபாகரன் எப்படி தமிழ் ஈழத்தின் தலைவராகிறார் என்பதை இரண்டாம் பாகமாகவும்  எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். ஜனவரி மாதத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க