Published:Updated:

`இது எனக்கு வியப்பாக இருக்கிறது' - 106 வயதான ரசிகை சந்தித்த பின் நெகிழ்ந்த மகேஷ்பாபு!

`இது எனக்கு வியப்பாக இருக்கிறது' - 106 வயதான ரசிகை சந்தித்த பின் நெகிழ்ந்த மகேஷ்பாபு!
`இது எனக்கு வியப்பாக இருக்கிறது' - 106 வயதான ரசிகை சந்தித்த பின் நெகிழ்ந்த மகேஷ்பாபு!

106 வயதான தன் ரசிகையின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார், நடிகர் மகேஷ்பாபு. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவிவருகின்றன.


சிறு வயது முதலே யாரையாவது ஒருவரைப் பார்த்து வியந்து, அவர்களால் ஈர்க்கப்பட்டு, நம்மையறியாமலேயே அவர்களுக்கு ரசிகர்களாகிவிடுகிறோம். அது எந்தத் துறையானாலும் சரி. வளர வளர அவர்களின் பிம்பங்கள் இறுகப் பற்றிக்கொள்கின்றன. வளர வளர சிலருக்கு அவர்களின் நாயகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர், நாயகர்களாக குறிப்பிட்ட சிலரை ஏற்கத் தயங்கி, அதிலிருந்து விலகியே இருப்பார்கள். எப்படியிருப்பினும், ஏதோ சில காரணங்களால் ஈர்க்கப்பட்ட பிரபலங்களை ஒருநாளேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலனோர்களின் மனங்களில் வேர்விட்டிருக்கும். அப்படித்தான் அந்த 106 வயதான பாட்டியும். ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் ரேலங்கி சத்யவதி (106).

இவர், நடிகர் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகை. அவரை சந்திக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனா. அவரின் கனவை எப்படியோ தெரிந்துகொண்ட நடிகர் மகேஷ்பாபு, தற்போது நடித்து வரும் ‘மகரிஷி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்தப் பாட்டியை அழைத்து வரக் கூறியுள்ளார்.  அங்கு வந்த சத்யவதி, மகேஷ்பாபுவைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்துப்போனார். தொடர்ந்து, `எப்படியிருக்கீங்க?' என்று கேட்க, இருவரின் சந்திப்பும் சில நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ``தலைமுறை கடந்து அன்பு நீண்டுகொண்டே வருவதை எண்ணி வியப்பாக இருக்கிறது. தலைமுறை தாண்டி ஒருவரிடமிருந்து வரும் அன்பைப் பார்த்து உணர்கிறேன். என் ரசிகர்களிடமிருந்து வரும் அன்பு எப்போதும் என்னை மூழ்கடிக்கச் செய்துவிடும். ஆனால், 106 வயதான ரேலங்கி சத்யவதியின் அன்பு, என் இதயத்தின் எல்லா மூலைகளையும் தொட்டுச் சென்றுள்ளது. என்னைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களைவிட நான்தான் அதிகமாக மகிழ்ந்தேன்'' என்று பதிவிட்டுள்ளார்.