`அவருக்கு நம்மள தெரியுமா?’ - ரோபோ சங்கர் கலகல   | robo shankar Shares About Mahesh babu simbu meet

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (27/11/2018)

கடைசி தொடர்பு:14:25 (27/11/2018)

`அவருக்கு நம்மள தெரியுமா?’ - ரோபோ சங்கர் கலகல  

மகேஷ் பாபு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் `வந்தா ராஜாவாதான் வருவேன்.’ சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நேற்று 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படப்பிடிப்பின் இடையே மகேஷ் பாபு, சிம்பு சந்தித்த போட்டோக்கள் வெளியாயின. அந்தப் படத்தில் சிம்புவுடன் ரோபோ சங்கர் உடனிருந்தார். மகேஷ் பாபுவை சந்தித்தது குறித்து ரோபோ சங்கரிடம் பேசியபோது ``நாங்க ஷூட் பண்ணும்போது பக்கத்து செட்ல மகேஷ் பாபு ஷூட்டிங் நடக்குதுனு தெரிஞ்சுது. சிம்பு சார் அவரை பார்த்துட்டு வரலாம்னு கூப்பிட்டாரு. மகேஷ் பாபுவ நேர்ல போய் பார்த்தோம், என்ன பேசுனாருன்னு கேட்டுடாதீங்க, அவருக்கு நம்மள தெரியுமா? சிம்பு சார்ட்ட பேசிட்டிருந்தார்" அவ்வளவுதான்.

``  'விஸ்வாசம்',  'வந்தா ராஜாவாதான் வருவேன்' பொங்கலுக்கு வருது. 'மாரி 2'  ரிலீஸாக ரெடியா இருக்கு, அடுத்த வருஷ ஆரம்பம் நல்லா இருக்குது" என்றார். மகேஷ் பாபு 'மகரிஷி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.