`2.O'-வை மறுதணிக்கை செய்யணும்!’ - செல்போன் ஆபரேட்டர்கள் திடீர் போர்க்கொடி | petition against rajini's 2.O film

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (27/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (27/11/2018)

`2.O'-வை மறுதணிக்கை செய்யணும்!’ - செல்போன் ஆபரேட்டர்கள் திடீர் போர்க்கொடி

செல்போன்களைத் தவறாகச் சித்திரித்துள்ளதாகக் கூறி ரஜினியின் 2.O படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி செல்போன் ஆபரேட்டர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ரஜினி

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகக் கூடியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும் எமி ஷாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளதாலும் பாலிவுட் தரப்பிலும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழு, கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை மறுதினம் ரிலீஸாக உள்ளது. ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. 

டீசர் மற்றும் டிரெய்லரில் செல்போன்கள் வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில், செல்போன்களைத் தவறாக சித்திரித்துள்ளதாகக் கூறி 2.O படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி செல்போன் ஆபரேட்டர்கள் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எவ்வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரெய்லரில் செல்போன்களைத் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க