இணையத்தைக் கலக்கும் '96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்! | deleted scenes of '96' movie is released

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (27/11/2018)

இணையத்தைக் கலக்கும் '96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!

அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற படம், '96. காதலர்களுக்கான ஸ்பெஷலாக உருவான இப்படத்தில், அறிமுக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

96

தவிர, படத்தில் இடம்பெற்ற நாஸ்டால்ஜியா காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றும் இந்தப் படத்தின் தாக்கத்தைப் பல வாட்ஸ்ஆப் குழுக்களிலும் ஸ்டேட்டஸ்களிலும் பார்க்க முடிகிறது என்பதுதான் இப்படத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறாத சில காட்சிகளைப் படத்தின் தயாரிப்பு தரப்பு யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. நான்கு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில், ஹீரோயின் ஜானுவை பாடகி ஜானகியிடம் அறிமுகப்படுத்தி, ஒரு குட்டி உரையாடலை நிகழ்த்திக் காட்டுகிறார், ஹீரோ ராம். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவிவருகிறது.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க