ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் அஜித் ஆலோசனை! - வைரலாகும் புகைப்படங்கள் | Actor Ajith went Germany to meet Vario Helicopters md photo goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (28/11/2018)

கடைசி தொடர்பு:11:06 (28/11/2018)

ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் அஜித் ஆலோசனை! - வைரலாகும் புகைப்படங்கள்

தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டத்துக்காக ஜெர்மனி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

அஜித்

நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர். மேலும் ட்ரோனை இயக்குவதிலும் சிறந்து விளங்குகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ட்ரோன் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்தது. அஜித் வழி நடத்திய அணிக்குப் பரிசு கிடைத்ததை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அஜித் நடித்துவரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறார் அஜித். இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சென்னை எம்.ஐ.டி கல்லூரி மைதானத்துக்கு வந்த அஜித், ட்ரோன் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பெரும் வைரலானது. தற்போது அதே தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார் அஜித். அங்கு வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. அறிவியல் தொடர்பான இவரின் முயற்சிக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.