வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (28/11/2018)

கடைசி தொடர்பு:11:59 (28/11/2018)

`Poetu' தனுஷ் இஸ் பேக் - `ரௌடி பேபி' சிங்கிள் டிராக் வெளியானது #Maari2

தனுஷ், சாய் பல்லவி  நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தின் முதல் பாடலான ‘ரவுடி பேபி’ இன்று வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா, தனுஷ் படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தனுஷ்


பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த `மாரி' 2015-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், வில்லனாக விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். விஐபி 2-ம் பாகத்தைப்போல இப்படத்துக்கும் அவர் இசையமைக்கவில்லை. `மாரி' படம் இசை மக்களைக் கவர்ந்திருந்தது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும். மாரி படத்தின் வசனங்கள் எல்லாமே ட்ரண்டை உருவாக்கியது. படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  

தற்போது அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ பாலாஜி மோகன் இயக்க தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர் . யுவன் ஷங்கர் ராஜா இசையில் மூன்று பாடல்கள் உள்ளன. அதில் முதலாவதாக இந்த ‘ரவுடி பேபி’ இன்று வெளியானது. தனுஷ் எழுதியுள்ள இப்பாடலில் தனுஷுடன் தீ டூயட் பாடலாகப் பாடியுள்ளார். இப்பாடலின் நடன அமைப்பை பிரபுதேவா இயக்கியுள்ளதால் தனுஷ், சாய் பல்லவி நடனத்தை வீடியோவாகப் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாகவுள்ளனர். படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.