வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:10 (28/11/2018)

`என் பொறுமையைச் சோதித்த படம்!’- அக்‌ஷய் குமாரின் 2.0 ஓபன் டாக்

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகக் கூடியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருப்பதால் பாலிவுட் தரப்பிலும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.

அக்‌ஷய் குமார்

 

இந்நிலையில் 2.0 படம் குறித்து அக்‌ஷய் குமார் பேசுகையில், `2.0 படம் பருவ நிலை மாற்றம் குறித்துப் பேசியுள்ளது. இந்த பூமியானது மனித ஓட்டத்துக்கு மட்டுமான இடமில்லை. விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமானதுதான். மனிதர்களுக்கு எதிராக அவற்றால் குரல் எழுப்ப முடியாது. ஆனால் அவை வாழ்வதற்கு உரிமை உள்ளது. அதனால் இயற்கையை அழிக்காதீர்கள்.

படப்பிடிப்பின் போது நானும் ஷங்கரும் மராத்தியில் பேசிக்கொள்வோம். ஷங்கர் ஒரு அற்புதமான இயக்குநர். அவர் படத்தின் முழுக் கதையையும் என்னிடம் கூறினார். ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும். இந்தப் படத்தில் ப்ராஸ்தடிக்ஸ் (prosthetic) தான் கடினமான ஒன்றாக இருந்தது. அது என் பொறுமையைச் சோதித்தது. இந்த மேக்கப்பிற்கு 6 மணி நேரம் செலவிடவேண்டும். அதுவரை பொறுமையாக அமர்ந்து இருக்க வேண்டும். மேக்கப் போட்டுவிட்டால்,நீர்தான் அருந்த முடியும். நான் ஏற்கெனவே பொறுமையானவன்தான். இந்த ப்ராஸ்தடிக்ஸ் என்னை மேலும் பொறுமையானவனாக மாற்றியுள்ளது'' எனக் கூறியுள்ளார்.