தமிழ் சினிமாவில் கோலோச்சிய சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது! | Actor chandirababu life histroy is becoming a film

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (28/11/2018)

கடைசி தொடர்பு:14:03 (28/11/2018)

தமிழ் சினிமாவில் கோலோச்சிய சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது!

தமிழ் சினிமா கண்ட நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் ஜெ.பி.சந்திரபாபு. இசை, நகைச்சுவை, இயக்கம் எனத் தன் பன்முகம் கொண்டு கோலோச்சியவர் சந்திரபாபு. சிறு வயது முதல் பல இன்னல்களைக் கடந்து தமிழ் சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்தவர். 

சந்திரபாபு

1947-ல் `தன அமராவதி' மூலம் தொடங்கிய இவரின் திரைப்பயணம் 'பிள்ளைச் செல்வம்' படத்தில் முடிவடைந்தது. 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார் சந்திரபாபு. ஒரு கட்டத்தில் வெறும் ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர் என்ற அளவுக்கு தன் மதிப்பை வைத்திருந்த சிறப்பு பெற்றவர். சந்திரபாபுவின் இசைக்கு ஆட்டம் போட்டவரும், அவரது நகைச்சுவைக்கு சிரித்தவரும், அவரின் வாழ்க்கையின் நிகழ்வுகள் கேட்டால் கண்டிப்பாக கண் கலங்குவர்.

சந்திரபாபு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் கே.ராஜேஸ்வர் புனைவாக எழுதிய `ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' நாவலை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்திய ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை மேற்கொள்கிறார்.

`அமரன்', 'இதயத்தாமரை', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் 'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' நாவலாசிரியருமான கே.ராஜேஷ்வர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.