`என்ன நம்பி கெட்டவங்க யாருமே இல்ல’- வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டீசர் | Vantha Rajava Than Varuven Teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:23 (01/12/2018)

`என்ன நம்பி கெட்டவங்க யாருமே இல்ல’- வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டீசர்

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

வந்தா ராஜாவாதான் வருவேன்

`செக்கச் சிவந்த வானம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.  இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இதற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பவன் கல்யாண், சமந்தா நடப்பில் வெளியான attarintiki daredi என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டு புகைப்படங்கள், சிம்பு டப்பிங் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கிடையே இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மற்றும் குடும்பத்தை மையப்படுத்தி மிகவும் கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ள இப்படத்தின் டீசரில் பாடல், நடனம், சண்டை என அமர்க்களப்படுத்தியுள்ளார் சிம்பு. வரும் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.