வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (01/12/2018)

கடைசி தொடர்பு:16:25 (01/12/2018)

‘என் ஜூலியட்டே..’!’ - மகளின் நடிப்பைப் பார்த்து பூரித்த ஷாருக் கான்

ஷாருக் கான், தன் மகளின் நடிப்பைப் பார்த்து புகழ்ந்து, தன் அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஷாருக் கான்

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாருக் கான், கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் `ஜீரோ’. இதில், ஷாருக் கான் குள்ள மனிதராக நடித்துள்ளார். இது, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ஜீரோ' படம், வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளில் படக் குழுவினரும் ஷாருக் கானும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வளவு பிஸியான பணிகளுக்கு மத்தியில், தன் மகள் படிக்கும் லண்டன் அர்டிங்லி கல்லூரிக்குச் சென்றுள்ளார் ஷாருக். அங்கே ,தன் மகள் சுஹானா கான் நடித்த ‘ஜூலியட்’ நாடகத்தை நேரில் கண்டு வியந்துள்ளார். ஒரு புறம் ஷாருக் கான் மற்றும் அவரது மகள் இருக்கும் புகைப்படம், மற்றொரு புறம் சுஹானா நடித்த ஜூலியட் நாடகத்தின் போஸ்டர். இரண்டு புகைப்படத்தையும் இணைத்து,  தன் மகளின் நடிப்புகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ என் ஜூலியட்டுடன் லண்டனில் உள்ளேன். என்ன ஒரு அற்புதமான அனுபவம். அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். ஷாருக் கானின் இந்தப் பதிவு, அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.