வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (02/12/2018)

கடைசி தொடர்பு:09:10 (02/12/2018)

`இங்க விக்கிறது பிரச்னை இல்ல; வளர்றது தான் பிரச்னை' - வெப் சீரிஸில் நடிக்கும் பாபி சிம்ஹா!

நடிகர் பாபி சிம்ஹா ``வெள்ளை ராஜா'' என்னும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். 

பாபி சிம்ஹா

`திருட்டுப் பயலே 2', 'சாமி ஸ்கொயர்' படங்களுக்குப் பிறகு ரஜினியின் `பேட்ட', `அக்னி தேவ்’ மற்றும் `சீறும் புலி' படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. இதில் `அக்னி தேவ்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில், புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் பாபி சிம்ஹா. சவாரி படத்தை இயக்கிய இயக்குநர் குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். இதற்கு ``வெள்ள ராஜா'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பாபி சிம்ஹாவுடன், பார்வதி நாயர், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார். வடசென்னையை மையமாக கொண்டு போதைப்பொருள் விற்கும் மாஃபியா தலைவனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் 7ம் தேதியில் இருந்து அமேசானில் வெளியாகவுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த சீரிஸின்  டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க