வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (03/12/2018)

கடைசி தொடர்பு:09:46 (03/12/2018)

`விவசாயிகளின் வலி தெரிஞ்சதாலதான் இந்தப் படத்துல கமிட்டானர்' - நடிகர் கிஷோர் குறித்து நெகிழும் இயக்குநர்!

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், போராட்டங்களை அடக்கி, திட்டத்தை நிறைவேற்ற அரசு முனைப்புக்காட்டிவருகிறது.  நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்ற வழக்கால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் உணர்வுப் போராட்டமாக மாறியுள்ள இத்திட்டம்குறித்து திரைப்படம் ஒன்று உருவாகிவருகிறது. 

கிஷோர்

`பசுமைவழிச் சாலை சேலம் - சென்னை' என்ற பெயரிலேயே அந்தத் திரைப்படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் கோபால் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கிஷோர், பசுபதி ஆகியோர் நடித்திருக்கும்  இப்படத்தில், தற்போது சமுத்திரக்கனி, பூஜா குமார், ரேவதி, சுஹாசினி  ஆகியோர் இணைந்துள்ளனர். 

நேபாளம், மியான்மர் போன்ற பகுதிகளில்படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது ராஜஸ்தான் புஷ்கர் மேளா நிகழ்ச்சியில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. படம்குறித்து இயக்குநரிடம் பேசினோம். 

கிஷோர்

``தற்போது 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சமுத்திரக்கனி, பூஜா குமார், ரேவதி, சுஹாசினி ஆகியோர் நடிப்பது உண்மைதான். படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிடம் பேசிவருகிறோம். அடுத்தகட்டமாக, அலகாபாத்தில் படப்பிடப்பிப்பு நடத்த உள்ளோம்.

இயக்குநர் சந்தோஷ் கோபால்கிஷோர் சார் கதாபாத்திரத்துக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும். சார் எப்பவுமே ரொம்ப சிம்பிளான மனிதர். ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தும்போதுகூட, அவருக்கு கேரவன் வழங்கவில்லை. மக்களோடு மக்களாகத் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு ஒத்துழைத்தார். ரொம்ப உணர்ச்சிகரமான மனிதர்.

நவீன உரங்களால் புழுக்கள் சாகின்றன என வருத்தப்படக்கூடியவர் அவர். விவசாயிகளுடைய வலியை ஒரு விவசாயியாக இருந்து தெரிந்துகொண்டதால்தான், அவர் இந்தப் படத்தில் கமிட்டானார். மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும். மக்களை அகற்றிவிட்டு திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க