`பாக்கத்தானே போற... இந்தக் காளியோட ஆட்டத்த!’ - `பேட்ட’ ஃபர்ஸ்ட் சிங்கிள் | Petta first single released

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:12 (03/12/2018)

`பாக்கத்தானே போற... இந்தக் காளியோட ஆட்டத்த!’ - `பேட்ட’ ஃபர்ஸ்ட் சிங்கிள்

 2.0 படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ரஜினியின் 'பேட்ட' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.     

பேட்ட

'எந்திரன்' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துவரும் புதிய படம், `பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுவந்தது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

அனிருத் | எஸ்பிபி

ஏற்கெனவே அறிவித்ததுபோல் பொங்கலுக்கு படம் ரிலீஸாக உள்ள நிலைமையில், இன்று 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' பாடல் வெளியிடப்பட்டது. அனிருத், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் எஸ்.பி.பி பாடுவது இதுவே முதல் முறையாகும். படத்தின் அடுத்த பாடல் 7-ம் தேதியும், மொத்த ஆல்பம் 9-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.