மக்கள் போராட்டங்களால் நிரம்பி வழிந்த மகத்தான ஆண்டு 2011...

வரலாற்றில் தனிப்பெரும் தலைவர்களுக்கு இணையாகச் சில கிராமங்களின் பெயர்களும் முக்கியத் துவம் பெறுகின்றன. 'கம்யூனிஸ்ட் தீவிர வாதமாக’ அடையாளம் காட்டப்படும் 'நக்சல்பாரி’ என்ற சொல், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். சாதித் தீண்டாமையின் உச்சமாகவும் அதை எதிர்க்கும் போரின் அடையாளமாகவும் சொல்லப்படும் கீழ்வெண்மணி, நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர். அணு ஆபத்துக்கு எதிராக ஜப்பானில் உச்சரிக்கப்படும் கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருக்கிறது. 'தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கப்போகிறது’ என்று உலக நாடுகள் கருத்தரங்கில் உச்சரிக்கப்படும் வார்த்தையாக இன்று கம்பம்மேடு, போடி மேடு, தேனிப் பகுதிகள் இருக்கின்றன. நக்சல்பாரியும், கீழ்வெண்மணியும், கூடங் குளமும், கூடலூரும் வெறும் ஊர்ப் பெயர்கள் அல்ல. மக்களின் போராட்டங் களுக்குப் பாதை காட்டிய காரியத்தை முதலில் தொடங்கிய திசைகாட்டிகள்!

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் ஒரு பந்தலைப் போட்டு, அந்தப் பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, நாட்டில் நடக்கும் எத்தனையோ உண்ணாவிரதங்களில் இதுவும் ஒன்று என்றுதான் ஊடகங்கள் நினைத்தன. முதல் ஒரு வாரத்துக்கு அது எந்தச் சலனமும் இல்லாமல்தான் கடந்தது. 13-வது நாள்... 14-வது நாள்... 15-வது நாள்... என்று நகர்ந்தபோதுதான் போராட்டத் தின் வீரியம் வெளி உலகத்துக்குத் தெரிந்தது.

முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதுதான் தங்களின் ஒரே லட்சியம் என்று கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் துடித்தபோது... இங்கு உள்ள அரசியல் கட்சிகள் எதிர்த்து அறிக்கைவிட்டன. அந்தப் பகுதி மக்களில் சிலர் கும்பலாக நின்று பேசிக்கொண்டார் கள். அதில் ஆதங்கம் இருந்ததே தவிர, உணர்ச்சிகள் இல்லை. 'கேரளாவில் தமிழ்ப் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்’ என்றதும் எங்கிருந்துதான் கிளம்பினார்களோ? வீடுகளை விடுத்து நாட்டுக்காக வெளியே வந்தார்கள். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. தினமும் ஒவ்வொரு ஊரில் இருந்தும் காலையில் 'வேலைக்குப் போவது மாதிரி’ சரியாக 9 மணிக்கு ஏதாவது ஓர் ஊரில் இருந்து மக்கள் திரள் கிளம்புகிறது. அணையைக் காப்பதும், கேரளாவில் வாழும் தமிழரைக் காப்பதும்தான் இவர்களது லட்சியங்கள். வழிநடத்துபவர் இல்லாமல் போராட்டங்கள் நடப்பது இல்லை என்பதுதான் இது வரையிலான விதி. ஆனால், முல்லைப் பெரியாறு காக்கத் திரள்பவர்களுக்கு யார் தலைவர்?

கூடங்குளம் மக்கள் போராட வந்ததற்குத் தத்துவார்த்த காரணங்களைச் சொல்லவில்லை. எளிமையாகத் தங்களது சந்தேகங்களைச் சொன்னார்கள். ''கூடங்குளத்து அணு மின் நிலைய நிர்வாகத்துக்காரங்க பாதுகாப்பு ஒத்திகை நடத்தினாங்க. அதுக்குப் பிறகுதான் எங்களுக்குப் பயமே வந்துச்சு. அணு மின் நிலையத்துல இருந்து கதிர்வீச்சு வந்தால் துண்டை எடுத்து முகத்துல மூடிக்கிடணுமாம். வாயைத் திறக்கக் கூடாதாம். கதவு, ஜன்னல்கள் எல்லாத்தையும் மூடிக்கிடணுமாம். கதிர்வீச்சு மண், புல், தண்ணீர், பால் என எல்லாத்துலயும் கலந்திருக்கும்னு சொன் னாங்க. அதனால அவங்க சொல்லும் வரை நாங்க எதையும் சாப்பிடக் கூடாது. 30 கி. மீ. தள்ளி ஓடிரணும்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் இது எவ்வளவு பெரிய ஆபத்துனு எங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது. அணுக் கதிரால் ஆபத்து இல்லேன்னா, எதுக்கு இந்த ஒத்திகை நடத்தணும்?'' என்று அந்தப் பெண்கள் பத்திரிகையாளர்களிடம் கேட்டார்கள். இந்த யதார்த்தமான கேள்விகளுக்கு எந்த விஞ்ஞானியும் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும்விட ஒரு மனிதனுக்கு உயர்ந்தது உயிர். அதற்கு அச்சுறுத்தல் என்ற பிறகுதான் மக்கள் கூட்டமாகத் திரள ஆரம்பித்தார்கள். முல்லைப் பெரியாறு அணைக்குச் சிக்கல் வந்தால், அதை நம்பி இத்தனை ஆண்டு காலம் விவசாயம் பார்த்து வந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் வறட்சி பரவும் என்பதால்தான், அந்தப் பகுதி மக்கள் அணி திரள்கிறார்கள். இந்தச் சிக்கல் தமிழகத்துக்கு இப்போதுதான் முதன்முதலாக வருகிறது. வட மாநிலங்கள் பல ஆண்டுகளாக அனுபவித்துவரும் வேதனை இது!

உலகம் முழுக்கவே இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். வட ஆப்பிரிக்க நாடான டுனீசியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன், சிரியா, ஏமன்... என பல நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். அதுவும் அமெரிக்காவில் தொடங்கிய வால் ஸ்ட்ரீட் போராட்டம் யாரும் எதிர்பாராதது. நிதி மூலதனமே அமெரிக்க மக்களின் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக மாறியதால், பெரும் நிதி நிறுவனங்கள் இருக்கும் நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட் பகுதியை நோக்கித் திரண்டார்கள் மக்கள். அமெரிக்காவிலும் அரேபிய நாடுகளிலும் இந்தியாவில் முன் அறிமுகம் இல்லாத அண்ணா ஹஜாரேவுக்குப் பின்னாலும் கூடங்குளத்திலும் கூடலூரிலும் திரளும் கூட்டம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டும் அல்ல... அரசியல் கட்சி களுக்கும் எதிரானது.

கட்சிகள் மற்றும் தலைவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் அல்லது அவர்களை நிராகரிப்பதன் அடையாளமாகவே கூடுகிறார்கள். இன்று கேரள அரசுக்கு எதிரான போராட்டம் நாளை தமிழக அரசுக்கு எதிரானதாகக்கூட மாறலாம். அனைத்துப் பகுதி மக்களுக்கும் எப்படித் திரள வேண்டும், போராட வேண்டும் என்பதைக் கூடங்குளம் பிரச்னையும் முல்லைப் பெரியாறும் உணர்த்தி இருக்கிறது!

வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட ஒரு பதாகையில் 'புரட்சியின் கணத்தை ஒருவராலும் யூகிக்க முடியாது!’ என்று எழுதப்பட்டு இருந்தது. அது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல என்பதைக் கூடங்குளமும் முல்லைப் பெரியாறும் உணர்த்திவிட்டன!