`` 'பாட்ஷா', 'அண்ணாமலை' போல... அதான் அனிருத் ஆசை!” -`பேட்ட’ சிங்கிள் பின்னணி | Aniruth's mother shares about petta single released

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:09:00 (04/12/2018)

`` 'பாட்ஷா', 'அண்ணாமலை' போல... அதான் அனிருத் ஆசை!” -`பேட்ட’ சிங்கிள் பின்னணி

`ஒரு ரசிகராகத்தான் அனிருத் 'பேட்ட' படத்துல  வேலை செஞ்சுட்டு வர்றார்’ என அவரின் அம்மா தெரிவித்தார். 

அனிருத்

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிக்கொண்டிருக்கும்   `பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' என்ற பாடல் நேற்று மாலை  வெளிவந்தது. முதன்முறையாக ரஜினி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத், இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியமுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல், சமூக வலைதளங்களில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. தற்போது யூ ட்யூப் ட்ரெண்டிங்கிலும் டாப்பில் உள்ளது.  

பேட்ட

ரஜினிக்கு மிகவும் நெருங்கிய உறவு முறைக்குள் வரும் அனிருத், நீண்ட நாள்களாக ஆசைப்பட்ட விஷயம், ரஜினி படத்துக்கு இசையமைப்பதுதான். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் அந்தக் கனவு ஓகே ஆக, வெளுத்து வாங்கியிருக்கிறார் அனிருத்.  

அம்மா லஷ்மி

இதுகுறித்து அனிருத்தின் தாயார் லட்சுமி அவர்களிடம் பேசினோம், ``அனிருத், ரஜினி சாருடைய தீவிர ஃபேன், இந்தப் படத்தோட பாடல்கள் ஒவ்வோண்ணும் வித்தியாசமா இருக்கணும்னு அனி சொல்லிட்டு இருப்பார். எப்படி 'அண்ணாமலை', 'பாட்ஷா'னு தலைவரைப் பாக்கும்போது தீம் மியூசிக், பாடல்கள் ஒரு சந்தோஷத்தைக் கொடுத்துச்சோ, அதேபோல 'பேட்ட' படத்தோட இசை இருக்கணும்'னு சொல்லியிருந்தார். 

மரண மாஸ்

படத்தோட இசையைப் பற்றி நான் சொல்றதவிட அவர் பேசுனாதான் நல்லாயிருக்கும். அவரை எப்பவுமே தலைவர்னுதான் கூப்பிடுவார். ஒரு ரசிகராத்தான் அவர் வேலை செஞ்சுட்டு வர்றார்" என்றார். பேட்ட படத்தின் அடுத்த பாடல், வரும் 7-ம் தேதியும், மொத்த ஆல்பம் 9-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.