``உங்கள் யுத்தத்தில் பங்கேற்க வரவில்லை.. அதை முடிக்க வந்திருக்கிறேன்!" அசத்தும் #CaptainMarvel 2 வது டிரெய்லர் | Captain Marvel trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:34 (04/12/2018)

``உங்கள் யுத்தத்தில் பங்கேற்க வரவில்லை.. அதை முடிக்க வந்திருக்கிறேன்!" அசத்தும் #CaptainMarvel 2 வது டிரெய்லர்

CaptainMarvel

அடுத்த வருடம் மார்ச் மாதம் வரவிருக்கிறது மார்வெல் ஸ்டுடியோஸின் `கேப்டன் மார்வெல்' (CaptainMarvel). அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் என்று சென்ற வருடம் மெகா ஹிட்டடித்த மார்வெல், அதன் அடுத்த பாகம் வரும் முன்பே, மற்றோர் அதீத சக்தி படைத்த சூப்பர் ஹீரோவான `கேப்டன் மார்வெல்'லின் தனிக் கதையைக் களத்தில் இறக்குகிறது. இன்ஃபினிட்டி வாரின் இறுதியில் கேப்டன் மார்வெல்லை நிக் ஃப்யூரி உதவிக்கு அழைப்பதுபோல காட்சி அமைந்திருக்கும். `யார் அந்த கேப்டன் மார்வெல்' என சூப்பர்ஹீரோ சினிமா ரசிகர்கள் குழம்ப அதற்கு விடை சொல்வதுபோல இந்த `கேப்டன் மார்வெல்' படம் இருக்கும்.

டிரெய்லர்

ஏற்கெனவே அதன் முதல் டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது விரிவான இரண்டாவது டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் படம் எத்தகையது, கதை எந்தப் போக்கில் நகர்கிறது என்பதை ஓரளவுக்குக் கணித்துவிடலாம். காமிக்ஸ் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்வெல்லின் பைனரி ஃபார்ம் (Binary Form) டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அதீத சக்தி படைத்த கேப்டன் மார்வெல் ஃபுல் ஃபார்மில் இருக்கும்போது ஓர் அணு உலைக்குச் சமம் என்பது காமிக்ஸ் ரசிகர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். கொடூர வில்லன் தானோஸிற்கு இனி இறங்கு முகம்தான்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க