கு.அழகிரிசாமி, 'புயலிலே ஒரு தோணி’ ப.சிங்காரம் போன்ற எழுத்தாளர்களை ஆதர்சமாகக்கொண்டு துவங்கிய இலக்கியப் பயணத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது!'' - வாசகர்கள், சக எழுத்தாளர்களின் வாழ்த்துக்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டே வரவேற்றார் சு.வெங்கடேசன். இந்த ஆண்டு 'காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முதல் நாவலுக்கே சாகித்ய அகாடமி விருது, மிக இளம் வயதில் பெற்ற விருது.

''மதுரை அருகே ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவன் நான். கல்லூரி படிப்பு முடித்ததுமே சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியன் ஆகிவிட்டேன்!'' என்பவர், இப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்.

''மதுரை என்ற நிலப்பரப்பைப் பற்றி ஒரு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?''

''உலகின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2,500 வருடப் பழமைகொண்ட மதுரை, இன்னமும் உயிர்ப்போடு இயங்கும் நகரமும்கூட. மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் இந்த 2,500 வருடப் பழமை அப்பி இருக்கிறது. வரலாற்றின் வசீகரங்கள் நிறைந்த நிலப்பரப்பு என்று மதுரையைச் சொல்லலாம். 1310-1920 வரை 600 ஆண்டு கால மதுரையின் வாழ்க்கையை எழுத எழுத, பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்திருக்கும் மாயக் கம்பளம் போல வரலாறு என் முன் விரிந்தது. அதைப் படைப்பாக மாற்றியபோது உருவானதுதான் 'காவல் கோட்டம்’!''

'' 'எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள் இருக்க, ஒரே ஒரு நாவல் எழுதியவருக்கு விருதா?’ என்ற சர்ச்சைகளுக்கும், 'காவல் கோட்டம், ஆயிரம் பக்க அபத்தம்’ என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனத் துக்கும் உங்கள் பதில்?''

''என் வாழ்நாளிலேயே அதிகபட்சம் காவல்கோட்டம் போல மூன்று நாவல்கள்தான் எழுத முடியும். காவல் கோட்டத்தை எழுதி முடிக்க எனக்கு பத்து ஆண்டுகள் பிடித்தன. அப்படிப் பார்த்தால் சுந்தரராமசாமி தன் வாழ்நாளிலேயே மூன்றே மூன்று நாவல்கள்தான் எழுதிஇருந்தார். நாவலுக்கு உள்ளிருந்துதான் விமர்சனம் வைக்கப்பட வேண்டுமே தவிர, ஒருவர் எத்தனை நாவல் எழுதி இருக்கிறார் என்பதை வைத்து விமர்சிக்கக் கூடாது. எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனம் அவருடைய கருத்து. ரசனை மிகுந்த வாசகர்களின் தீர்ப்புதான் இறுதியானது!''

''காவல் கோட்டம் நாவலில் முல்லைப் பெரியாறு பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். இப்போது அந்த அணை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக மாறிஉள்ள நிலையில், நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''1876-77ம் ஆண்டு காலத்தில் தென்இந்தியாவில் கொடூரமான தாதுப் பஞ்சம் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக தாதுப் பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி மதுரை. 'நல்லதங்காள் பஞ்சம்’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பஞ்சத்தின்போது மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர்

காணாமல் போயினர். தனுஷ்கோடியில் இருந்து கண்டிக்கு ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர் என்கிறது வரலாறு. இந்தப் பஞ்சத்தைப்பற்றி ஆராய்வதற்காக பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்டதுதான் பஞ்ச கமிஷன். அப்போதுதான் வெறுமனே யோசனை வடிவத்தில் இருந்த முல்லைப் பெரியாறு அணை, செயல்வடிவம் பெற்றது. முல்லைப் பெரியாறு அணை என்பது ஏதோ கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் அல்ல. அது மரணத்துக்கு உள்ளிருந்து எழுந்த பெரும் கனவு. சமகால அரசியல் நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு, வரலாற்று உணர்வுடன் அணுகும்போதுதான் முல்லைப் பெரியாறு அணை உருவான காரணத்தையும் அதற்குப் பின்னணியில் இருந்த துயரங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும். தன் மக்களை மீண்டும் சாகக் கொடுக்காமல், ஓடும் நதியை மறித்து மதுரைக்குத் திருப்பிவிடும் நல்லதங்காளின் பேருருதான் முல்லைப் பெரியாறு அணை!''

''இடதுசாரி எழுத்தாளர் என்ற வகையில் சமகாலப் படைப்பாளிகள் சந்திக்கும் சவால்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''புதுமைப்பித்தன், மௌனி போன்றவர்களால் தமிழ்ச் சிறுகதைகளில் எப்படி நவீனத்தின் பங்களிப்பு உருவானதோ, அதேபோல கடந்த பத்து ஆண்டுகளில் நாவல்களில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. அதுவும் வீட்டையும் குடும்பத்தையும் சுற்றிச்சுற்றி வந்த தமிழ் நாவல்கள் அதைத் தாண்டி

வரலாற்றைப் பதிவு செய்பவையாகவும் தத்துவ விவாதங்களின் களனாகவும் மாறியுள்ளன.

ஆனால், இன்னொரு பக்கம் நாம் கொண்டாடும் அளவுக்குத் தமிழ் வாசிப்பு வளர்ந்திருக்கிறதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விஷயம். எல்லாவற்றையும்விட முக்கியமாக, உலகமயமாக்கலின் உச்ச காலத்தில் வாழ்கிறோம் நாம். நுகர்வுக் கலாசாரத்தால் சிதைபட்ட தற்கால வாழ்வில் நல்ல காதலாவது இருக்கிறதா என்பதைத் தேட வேண்டி இருக்கிறது. 90 வயதைக் கடந்த முதியவர்களைக் கிராமங்களில் காண முடியவில்லை. முதியவர்களை இழப்பது என்பது நினைவு களின் வழி கடத்தப்படும் நம் வரலாற்றை இழப்பதும்தான்!''