வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:01 (04/12/2018)

பத்மநாபசாமி கோயிலில் நடந்த விக்ரமின் ‘ மஹாவீர் கர்ணா’ படப்பூஜை!

நடிகர் விக்ரமின் அடுத்த படமான `மஹாவீர் கர்ணா' படத்தின் பூஜை நேற்று கேரளாவில் நடைபெற்றுள்ளது. 

விக்ரம்

நடிகர் விக்ரம் ‘சாமி 2’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார். `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

`கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து விக்ரம், `மஹாவீர் கர்ணா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்றுச் சண்டை படமாக உருவாக்கவுள்ள இது தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். 

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்துக்காக நேற்று கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பிரமாண்ட மணியை வைத்து இதற்கான பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நடிகர் சுரேஷ் கோபி, பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.