`ஜித்து’ - பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக் இதுதான்! | Vijay sethupathi single poster released in petta movie

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (04/12/2018)

கடைசி தொடர்பு:19:02 (04/12/2018)

`ஜித்து’ - பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக் இதுதான்!

பொங்கலுக்கு ரிலீஸாகிறது ரஜினியின் `பேட்ட’ திரைப்படம். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடித்திருக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் 'மரண மாஸ்' சிங்கிள் ட்ராக் நேற்று இணையத்தில் வெளியானது. அனிருத் இசையில் பாடல் வைரலானது. மேலும், சில குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் பாட்டின் மூலமாக ரஜினிக்கு எஸ்.பி.பி பின்னணி பாடல் பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பேட்ட

இந்நிலையில் படத்தின் மோஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சிம்ரனுடன் வெளியானது. படத்தில் ரஜினிக்கு மொத்தம் இரண்டு ஜோடிகள். சிம்ரன் தவிர த்ரிஷாவும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

பேட்ட

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. `ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி கையில் துப்பாகியுடன் காட்சியளிக்கும் கேரக்டரின் லுக் ரசிகர்களைச் சற்று உற்று நோக்க வைக்கிறது. மேலும், விஜய் சேதுபதிக்கு பின்னால் ரஜினி நடந்து வந்துகொண்டிருக்கும் சிறிய டீடெய்லும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் போஸ்டரும் அதிகப்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க