வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (05/12/2018)

கடைசி தொடர்பு:11:45 (05/12/2018)

`நான் கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன்!'- அதகளத்துடன் வெளியானது `மாரி 2' டிரெய்லர்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்துள்ள ‘மாரி-2’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மாரி

கடந்த 2015-ம் ஆண்டு, பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம், `மாரி'. அந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், வில்லனாக விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது, அந்தப் படத்தின் தொடர்ச்சியாக, ‘மாரி 2’-வை பாலாஜி மோகன் இயக்க, தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாரி - 2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெருமளவில் ரசிகர்களின் கனவம் ஈர்த்தது. மேலும், சமீபத்தில் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த  ‘ரௌடி பேபி ‘ பாடல், தற்போது பலரது போன்களில் ரிங்டோனாக ஒலிக்கும் அளவுக்கு ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து, இன்று மாரி- 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கலர் ஃபுல்லான காட்சிகளுடன் ரோபோ சங்கரின் காமெடி, தனுஷின் அதிரடி என 'மாரி' படத்தின் தொடர்ச்சியாக 'மாரி-2' படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படம், வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளது.