வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (05/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (05/12/2018)

``என் குழந்தை நடிகை சினேகா மேடம் பையன் மாதிரி சமர்த்தா இருக்கணும்'' - சென்றாயன் மனைவி

நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். அது என்ன சர்ப்ரைஸ் என்று தெரிந்துகொள்ள அவர் மனைவி கயல்விழியிடம் பேசினோம்.

சென்றாயன் மனைவி

`அவர் பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும் என்னைச் சென்னைக்கு கூட்டிட்டுப் போயிட்டாரு. சென்னையில் பல இடங்களுக்குப் போனோம். அவரைப் பார்க்குற எல்லோருமே நீங்க தான் டைட்டில் வின் பண்ணுவீங்கன்னு நினைச்சோம்னு சொன்னாங்க. மக்கள் மனசுல இடம் பிடிச்சதே டைட்டில் வின் பண்ணதைவிட டபுள் சந்தோஷங்க. நான் கிட்டத்தட்ட நாலு வருஷமா சினேகா மேடத்தைப் பார்க்கக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேன். எனக்குச் சினேகா மேமை ரொம்பப் பிடிக்கும். அவர் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுவார். அப்புறம் மறந்துடுவார். நானும் விட்டுட்டேன். திடீர்னு ஒரு நாள் நாங்க வெளியில் கிளம்பினோம். எங்கே போறோம்னு சொல்லாம சர்ப்ரைஸா சினேகா மேமுடைய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார்'' என்றவரின் முகத்தில் அத்தனை பூரிப்பு!

சென்றாயன் மனைவி

அவங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டதை நிறைவேத்துறதுக்காக அங்கே கூட்டிட்டுப் போயிருக்கார். அவங்களைப் பார்த்தது அவ்வளவு சந்தோஷமா இருந்தது! விவரிக்க வார்த்தையே இல்லைனு சொல்லலாம். சினேகா மேம் குழந்தை விஹான் ரொம்ப க்யூட். தன் அம்மா என்ன சொல்றாங்களோ அதை மட்டும் செய்றான். மேம் சொன்னபடி வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்டோட மடியில சில நிமிஷம் வந்து உட்கார்ந்துட்டு அப்படியே மேம் மடியில போய் சமர்த்தா உட்கார்ந்துகிடுறான். வந்திருக்கிறவங்க புதுசா இருக்காங்களேங்கிற தயக்கமே இல்லை குழந்தைகிட்ட. சினேகா மேடத்தோட செல்லப் பையனா நடந்துக்குறான். விஹானைப் பார்த்ததுக்கு அப்புறம், அவனை மாதிரி சமர்த்துப் பையன் பிறக்கணும்னு ஆசையா இருக்கு' எனப் புன்னகைக்கிறார், கயல்விழி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க