வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (07/12/2018)

கடைசி தொடர்பு:12:33 (07/12/2018)

மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட்  லுக்! பிக்பாஸ் ஐஸ்வர்யா - ஆரி வைரல் வீடியோ

நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இவரும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

ஆரி

இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிக வித்தியாசமாக டிக்டோக் செயலின் நடன பதிவு மூலம் வெளியிட்டிருக்கிறார்கள் பட குழுவினர். இப்படி ஒரு புதுமையான ஐடியாவை வைத்து படத்திற்கான மார்க்கெட்டிங் செய்வது இதுவே முதல் முறை.

 

வித்தியாசமான இந்த ஐடியா பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிறையச் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி, மோஷன் போஸ்டர் எனப்படும் யுக்தியைப் பின்பற்றி வரும் பெரிய படங்களுக்கு இடையே, சிம்பிளாக ஒரு டிக்டோக் வீடியோ மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  பலரிடம் கொண்டு சேர்த்த படக்குழுவினருக்குப் பாராட்டோடு, இந்த ஐடியா பற்றி நடிகர் ஆரியிடமே கேட்டேன், " மக்களிடம் எளிதில் ஒரு விஷயத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு இன்று சமூக வலைதளங்களைத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. அதிலும் இன்று தமிழகமெங்கும் எல்லோரும் விரும்பும் ஆப் டிக்டோக் தான். வழக்கமான பாணியில் இல்லாமல், வித்தியாசமாக இதைச் செய்வதன் மூலம் படத்தை பற்றிச் சரியான அறிமுகம் கிடைக்கும் என நினைத்தோம்" என்றார்.

 

ஆரி

 

இந்த டிக்டோக் நடனத்தை வடிவமைத்தது யார் என்றதும், அதிர்ந்து சிரித்துவிட்டு தயங்கித் தயங்கி, " நான்தான் " என்றார். மேலும் படம் பற்றிப் பேசிய அவர், " இது முழுக்க முழுக்க இந்த ஜெனெரேஷனுக்கான லவ் ஸ்டோரி, காதலுக்குக் காதலால் தான் பிரச்னை என்று ஜாலியாக சொல்ல வருகிறோம். இந்த படம் காதலில் வெற்றியடைந்தவர்கள், தோல்வியடைந்தவர்கள் என எல்லாருக்குமான படம்" என்றார்.

 

ஆரி

 

சென்னையைச் சுற்றி பல இடங்களில் இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. க்ரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கியேரேஷன்  B. தர்மராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை,  "அய்யனார்" படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இயக்குகிறார். A.G. மகேஷ் இசை அமைக்க, 'அண்ணாதுரை', 'தகராறு' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர்  தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.