வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (07/12/2018)

அடுத்தடுத்து ஐந்து படங்கள்... நடிகர் ஜீவா அப்டேட்!

நடிகர் ஜீவா நடித்து இந்த வருடம் `கலகலப்பு 2’ படம் மட்டுமே வெளியானது. அதுவும், மூன்று ஹீரோக்களில் ஒருவராகதான் அவர் நடித்திருப்பார். இப்படத்துக்குப் பிறகு, ஜீவா அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. தற்போது, இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதன் அப்டேட் இதோ...

ஜீவா

அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான 'கீ' படம் தயாராகி ஒரு சில காரணங்களால் வெளிவராமல் இருக்கிறது. பின், டான் சாண்டி இயக்கத்தில் ஷாலினி பாண்டேவுடன் நடித்த 'கொரில்லா' படம் வரும் ஜனவரி மாதம் வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் இமாச்சல் அழகி நடாஷா சிங்குடன் நடித்த 'ஜிப்ஸி' படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தவிர, இயக்குநர் ரத்னசிவா இயக்கத்தில் ஒரு கமர்ஷியல் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு ஹீரோயின் ரியா சுமன் நடிக்கிறார். மேலும், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இதன் முதல் ஷெட்யூல் முடிந்தவுடன், இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் ஜீவா. மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஆக, ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் இவருக்கு 2019 சிறப்பாக இருக்கும். 

வாழ்த்துகள் ஜீவா ! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க