வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:42 (07/12/2018)

என் ஆளு ராஜா... என்கூட நில்லு! - `பேட்ட’ படத்தின் 2வது சிங்கிள் `உல்லாலா’ #Ullaallaa

பேட்ட படத்தின் இரண்டாவது ட்ராக் வெளியாகியிருக்கிறது!

அனிருத் இசையில் மூன்று நாளைக்கு முன்பு `பேட்ட’ படத்தின் சிங்கிள் ட்ராக் `மரண மாஸ்’ வெளியானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ட்ராக்கான, 'உல்லாலா' பாடல் வெளியாகியிருக்கிறது. 

பேட்ட

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'பேட்ட'. ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா எனப் பெரும் பட்டாளமே இதில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையில் வெளியான 'மரண மாஸ்' பாடல் இணையத்தில் சக்கைபோடு போட்டது. யூடியூபில் இதுவரை 9 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் ஊலாலா

இதைத் தொடர்ந்து இன்று காலை வெளியான புரொமோவில், ``தில்லு முல்லு படத்துல, தலைவர் ஃபுட்பால் ஸ்டேடியத்துல இருக்கும்போது செஞ்ச ரகளையை யாராலேயும் மறக்க முடியாது. அதை வெச்சுதான் இந்தப் பாடலை 'பைலா' முறையில் இசையமைச்சிருக்கேன்" எனச் சொல்லியிருந்தார், அனிருத். 'மரண மாஸ்' பாடலுக்கு வரிகள் எழுதிய விவேக்தான் இந்தப் பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார். ரஜினி படங்களில் கண்டிப்பாக ஒரு கருத்து பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த வரிசையில் 'பேட்ட' படத்தில் செம பெப்பியாகவும் இலங்கையில் புகழ் பெற்ற பாடல் முறையான 'பைலா' ஸ்டைலில் பாடல் வெளியாகியிருக்கிறது. நாகாஷ் அஸிஸ், இன்னோ கெங்கா இப்பாடலை பாடியிருக்கின்றனர்.