வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:48 (07/12/2018)

நாசர் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் அக்‌ஷரா! -  `கடாரம் கொண்டான்' அப்டேட்

விக்ரம் நடிக்கும் `கடாரம் கொண்டான்' படத்தில் கமல் மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் இளைய மகன் அபிஹசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சிவாஜி, கமல் சேர்ந்து நடித்தபடம் 'தேவர் மகன்'. நாசர் அந்தப் படத்தில் மாயத்தேவர் வேடத்தில் நடித்தது பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக 'தேவர் மகன்' படத்தைப் பார்த்த சிவாஜி, நாசருக்கு போன்போட்டு மனம்திறந்து பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாசர் குறிப்பிடுவதுண்டு.

விஜய்

நாசரின் மூத்தமகன் நடிகர் விஜய்யின் பரமரசிகன் சமீபத்தில் பிறந்தநாள் கண்ட அவரை, சென்னை அடையாறில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வித்தார், விஜய். இரண்டாவது மகன் 'சைவம்' படத்தில் நடித்தார் அதன்பிறகு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தும், `இனிமேல் நடிக்க மாட்டேன். டைரக்‌ஷன்தான் என் லட்சியம்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இப்போது கமல் தயாரிப்பில் உருவாகும் `கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம், அக்‌ஷ்ராஹாசனுடன் நாசர் மகன் அபிஹசன் நடித்து வருகிறார். `கடாரம் கொண்டான்' படம்முழுக்க பவனிவரும் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்கும் அபிஹசனுக்கு ஜோடியாக நடிப்பது கமலின் மகள் அக்‌ஷராஹாசன். 

அபிஹாசன் | அக்‌ஷரா ஹாசன்

மலேசியாவில் நடந்துவந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அபி நடித்த நடிப்பைப் பார்த்து விக்ரம் கைதட்டி பாராட்டி இருக்கிறார். இதுவரை எடுத்துள்ள படப்பிடிப்பு பகுதியில் நாசர் மகன் நடிப்பைப் பார்த்த கமல்ஹாசன் அபிஹசனை அலுவலகத்துக்கு அழைத்து உச்சிமோந்து பாராட்டி இருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க