மரணத்தின் விளிம்பில் அயர்ன்மேன்... மீண்டும் வரும் ஹாக்ஐ, ஏன்ட்மேன்! பரபர #AvengersEndGame டிரெய்லர் | Avengers End Game First Trailer Released

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (07/12/2018)

கடைசி தொடர்பு:20:15 (07/12/2018)

மரணத்தின் விளிம்பில் அயர்ன்மேன்... மீண்டும் வரும் ஹாக்ஐ, ஏன்ட்மேன்! பரபர #AvengersEndGame டிரெய்லர்

உலகம் எங்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படமான `அவெஞ்சர்ஸ்' நான்காம் பாகத்தின் முதல் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. #AvengersEndGame

Avengers End Game

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் வில்லன் தானோஸுடன் நடந்த யுத்தத்தில் தானோஸே வெற்றிபெற்றுவிட உலகின் பாதி மக்கள் தொகை அழிந்துவிடுகிறது. இதில் ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர் உட்பட சில அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோஸும் அடக்கம். அடுத்து என்ன நிகழப்போகிறது? மீதமிருக்கும் அவெஞ்சர்ஸ் அணி கேப்டன் அமெரிக்கா தலைமையில் எப்படி உலகை மீட்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். புதிதாக அறிமுகமாகவுள்ள 'கேப்டன் மார்வெல்' என்ற பெண் சூப்பர்ஹீரோவும் என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வியும் இருந்தது. 

கேப்டம் அமெரிக்கா, பிளாக் விடோ

ஆனால், இவை அனைத்துக்கும் மேலாக ஒரு மிகப்பெரிய கேள்வி இருந்தது. அது இந்த அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் பெயர் என்ன என்பதுதான். `அவெஞ்சர்ஸ்: அன்ஹைலெஷன்', 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' என்றெல்லாம் செய்திகள் வலம் வந்தன. தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படத்தின் பெயர் #AvengersEndGame என்பதை உறுதி செய்துள்ளது. அது மட்டுமின்றி இன்ஃபினிட்டி வார் படத்தில் இல்லாத ஹாக்ஐ மற்றும் ஏன்ட்மேன் ஆகியோர் இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த உலகை தானோஸிடமிருந்து எப்படி மீட்கப்போகிறார்கள் என்று பார்ப்போம். படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் 'கேப்டன் மார்வெல்' படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் டிரெய்லர் இதோ...

நீங்க எப்படி பீல் பண்றீங்க