வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (07/12/2018)

இசையே இல்லாமல் படம் இயக்கியிருக்கிறேன்! - இயக்குநர் வஸந்த்

சிலகால இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. தற்போது 28-வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளது. பல உலக இயக்குநர்களும், சினிமா விமர்சகர்களும் பாராட்டி வரும் இந்தப் படம் குறித்து வஸந்திடம் பேசினேன். 

வஸந்த்

``கதை பற்றி பெரிதாக இப்போ சொல்ல முடியாது. ஆனா, இந்தப் படம் என் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான படம். அதுமட்டுமில்லாம இந்தக் காலகட்டத்துக்கு ரொம்ப ரொம்ப தேவையான திரைப்படம். ஒவ்வொருத்தவங்களும் இந்தப் படத்தோட தங்களை தொடர்புபடுத்தி பார்க்க முடியும். முக்கியமா மும்பை திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துட்டு நிறைய ஆண்கள்தான் கைதட்டுனாங்க. எல்லோருமே இந்தப் படத்தை கொண்டாடுவாங்க. அப்படிப்பட்ட கதைதான் இது. முக்கியமா இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவில் 'பாலின சமத்துவ விருது' வாங்கியிருக்கு. 

வஸந்த்

படத்துல பார்வதி திரிவோத்து, காளீஷ்வரி சீனிவாசன், லஷ்மி மூணு பேரும் நடிச்சிருக்காங்க. காளீஷ்வரி இந்திய மொழி சினிமாவில் முதலில் அறிமுகமாகும் படம் இது. இவங்க Jacques Audiard பிரெஞ்ச் இயக்குநர் எடுத்த 'தீபன்' படத்தில் நடிச்சிருக்காங்க. இவர்கள் தவிர கருணாகரன், மாரிமுத்துவும் நடிச்சிருக்காங்க. அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் இவங்க மூன்று பேரின் கதைகளை வாங்கி நான் திரைக்கதை அமைச்சி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். முக்கியமா இந்தப் படத்துல இசையே கிடையாது. பின்னணி இசை உட்பட. இதற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும்'. என்று சிரிக்கிறார் இயக்குநர் வஸந்த். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க