வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (08/12/2018)

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'!

ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'காலா' படத்திற்கு பிறகு, பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதற்கிடையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'பரியேறும் பெருமாள்' படத்தை தயாரித்தார். அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடித்து வெளியான அந்தப் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன.

பா.ரஞ்சித்

இதற்கு பிறகு, இயக்குநர் பா.இரஞ்சித் எந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற கேள்வி இருந்தது. அதற்கு பதிலாக, அவரின் பிறந்த நாளான இன்று 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 'அட்டக்கத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்குகிறார். மெட்ராஸ் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் டென்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ராமலிங்கம் கலை இயக்க பணிகளை மேற்கொள்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இயக்குநர் பா.இரஞ்சித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க