`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்!’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி | Actor Vijay Sethupathi speech Petta audio launch

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (09/12/2018)

கடைசி தொடர்பு:10:48 (10/12/2018)

`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்!’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி

`பேட்ட' படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக தான் நடிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி பேசினார். 

விஜய் சேதுபதி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் `பேட்ட'. பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விழாவுக்குத் தாமதமாக வந்த விஜய் சேதுபதி நேரடியாக மேடைக்கு அழைக்கப்பட்டார். விஜய் சேதுபதி வருகையில், ரஜினி, தனது இருக்கையில் இருந்து எழுந்து வரவேற்றார். மேடையில் பேசிய விஜய் சேதுபதி, ``மிகவும் எளிமையான மனிதர் ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் மிகச்சிறந்த பாடம் அவருடன் நடித்தது. அவருடைய நடிப்பைப் பார்த்து ஆண்டவனே கைதட்டுவார்.

விஜய் சேதுபதி, ரஜினி

கார்த்திக் சுப்புராஜ், திரையுலகிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி எப்பவுமே கொஞ்சம் கமுக்கமான ஆளு. ஏதாவது ஒன்றை எப்பவுமே ஒளித்து வைத்திருப்பார். நிச்சயம் பேட்ட படத்திலும் அது இருக்கும். நல்ல மாஸா, கிளாசிக்கா இந்த படம் இருக்கும். எனக்கு என்னை மாதிரி மட்டுமே நடிக்கத் தெரியும். வேறு யார் மாதிரியும் நடிக்கத் தெரியாது. எப்பவுமே பெரிய ஆளை எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளு. அப்பத்தான் நாமளும் வரலாற்றுல இடம் பிடிக்க முடியும். இந்தப் படத்தில் நான் வில்லன்தான்’’ என்றார்.