Published:Updated:

`அவங்க இன்ட்ரோ கிடைக்குமா?’ - வித்யா பாலன் சந்திக்க ஆசைப்பட்ட அந்த ஆளுமை!

`அவங்க இன்ட்ரோ கிடைக்குமா?’ - வித்யா பாலன் சந்திக்க ஆசைப்பட்ட அந்த ஆளுமை!
`அவங்க இன்ட்ரோ கிடைக்குமா?’ - வித்யா பாலன் சந்திக்க ஆசைப்பட்ட அந்த ஆளுமை!

உதய்பூரில் நடந்துவரும் அம்பானி மகளின் திருமணத்தில் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்துள்ளார் வித்யா பாலன். அது தொடர்பாக தன் இன்ஸ்ட்ராகிராமில் நெகிழ்ந்துள்ளார். 

உலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரு நாள்கள் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட மேடைகள் அழகுற அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன. 

இஷாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். 

அம்பானி வீட்டுத் திருமணப் புகைப்படம்தான் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தைக் கலக்கி வருகிறது. இதற்கிடையில் நடிகை வித்யா பாலன் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன், ``விலைமதிப்பற்ற புகைப்படம். என் வாழ்கையில் முதல்முதலாக ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா எனக் கேட்ட தருணம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளின்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை. 

சில நாள்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு கண்ணாடி மேற்கூரையை உடைத்தால் மட்டுமே வானத்தை அடைய முடியும் என்று. அவர் நமக்காக உடைத்துள்ளார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் நிச்சயம் வானத்தை அடைவார். உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் அவரைக் கணித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு ஹீரோவாக இருப்பதற்கு நன்றி ஹிலாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.