அப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ் | petta movie updates

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (12/12/2018)

கடைசி தொடர்பு:14:44 (12/12/2018)

அப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்

'பேட்ட' படத்தின் அப்டேஸ்

' பேட்ட' படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. உலகம் முழுக்க பொங்கலுக்கு வெளிவரப் போகும் படத்துக்கான வியாபாரம் இப்போதே சூடுபிடித்து விட்டது. ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, மகேந்திரன், சிம்ரன், த்ரிஷா என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

 'பாட்ஷா' பட கெட்டப்பில் தாடியோடு வலம்வரும் ரஜினியுடன்  ஜோடி சேர்வது சிம்ரன், ஃப்ளாஷ்பேக் காட்சியில் முறுக்கு மீசை ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பவர், த்ரிஷா. 'பேட்ட' படத்தின் ஃப்ளாஷ்பேக் மதுரை பின்னணியில் நடப்பது போன்று படமாக்கி இருக்கின்றனர். ரஜினி, ஆடியோ விழாவில் சொன்னதுபோல் மதுரையில் படப்பிடிப்பு நடத்தினால் அன்புத்தொல்லை அதிகமாகிவிடும் என்பதால் மதுரையை ஜெராக்ஸ் செய்ததுபோல் வாரணாசியில் உள்ள ஒரு பகுதியில் படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.

ரஜினி

'பாட்ஷா' படத்தில் ரஜினியின் பெயர் மாணிக்கம் அவரின் உயிர் நண்பராக நடித்த சரண்ராஜின் பேர் 'பாட்ஷா' அவரை ரகுவரன் கொலை செய்தபிறகு தனது பெயரை 'மாணிக் பாட்ஷா' என்று மாற்றிக்கொள்வார். இப்போது 'பேட்ட' படத்தில் ரஜினியின்  பேர் காளி அவரின் நண்பராக நடிக்கும் சசிகுமாரின் பெயர் மாலிக் என்று சூட்டியிருக்கிறார்கள். அப்போது  'பாட்ஷா படத்தில் 'மாணிக்' பாட்ஷாவாக நடித்து மிரட்டிய ரஜினி, இப்போது 'பேட்ட' படத்தில் 'மாலிக்' காளியாக நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க