‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்!’  - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன் | cheran's thirumanam teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 06:02 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:57 (13/12/2018)

‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்!’  - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்

சேரன் இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் `திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

திருமணம்

'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்',  'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி',  'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் தனது 11-வது படைப்பாக  'திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிக்க காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பாலசரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க இயக்குநர் சேரனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சேரன்

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்டப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதற்கான விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். தொடர்ந்து படத்தின் டீசர் வெளியானது. மிகவும் வித்தியாசமாகத் திருமண பத்திரிகைபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தற்போது ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

திருமணம்

முன்னதாக விழாவில் பேசிய சேரன், ``நான் பார்த்த நடிகர்களில் முரளிதான் தன்மையான நடிகர். கஷ்ட காலங்களில் கூட நிற்பதாகவும் சரி, திரைப்படத்துக்காக முன்னெடுத்தும் சரி அவர் சிறந்த மனிதர். அவருக்கு அப்புறம் நான் பார்த்த, மிகச் சிறந்த மனிதர் விஜய் சேதுபதி தான். நாங்கள் இருவரும் படம் பண்ணப் போகிறோம்." என்று பேசினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க