8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்! - ரசிகர்கள் குஷி | dhanush sings a song in gv prakash music after 8 years

வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (16/12/2018)

கடைசி தொடர்பு:00:02 (16/12/2018)

8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்! - ரசிகர்கள் குஷி

8 வருடம் கழித்து ஜி.வி பிரகாஷ் இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஜெயில்

ஆதிக் ரவிச்சந்திரனுடன் இயக்கும் '3D' படம், '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்' ஆகிய படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் வசந்தபாலன் இயக்கத்தில்  'ஜெயில்' படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சிமூலம் புகழ்பெற்ற அபர்ணதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இவர்களைத் தவிர ராதிகா, நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். 'இரும்புத்திரை' படத்தை வெளியிட்ட கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், இப்படத்தை  தயாரிக்கின்றனர்.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

ஜி.வி.பிரகாஷ் - தனுஷ்

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்காக ஏற்கனவே நடிகை அதிதி ராவ் ஒரு பாடலை பாடியிருந்தார். தற்போது இந்த படத்துக்காக நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.  இதைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ், ``ஃபிரண்ட்ஸ் ஆர் பேக்... 8 வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய இசையில் ஒரு அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இத்தருணத்தில் இது ஒரு முக்கியமான ஆல்பமாகும்." என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை டேக் செய்து தனுஷ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ``ஜிவி இசையில் ஒரு அழகான மெலோடி பாடலைப் பாடியுள்ளேன். உங்களுடன் இருந்ததது ஒரு அழகான தருணம் ஜிவி. படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக செல்வராகவனின் `மயக்கம் என்ன' படத்தில் இருவரும் இணைந்து பணி புரிந்தனர். அதன்பிறகு எந்தப் படத்திலும் இவர்கள் இணையவில்லை. தற்போது 8 வருடம் கழித்து இருவரும் இணைந்துள்ளதை அடுத்து இருவரது ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க