வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (16/12/2018)

`நமக்காக தான் அரசாங்கமே தவிர;அரசாங்கத்துக்காக நாம இல்ல’ - சீதக்காதி ஸ்னீக் பீக்!

விஜய் சேதுபதி நடிப்பில் 20-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கும் சீதக்காதி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சீதக்காதி


`'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'சீதக்காதி'. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.அதனைத் தொடர்ந்து வெளியான மேக்கிங் வீடியோவும் இணையத்தில் வைரலானது. ஆஸ்கர் வின்னர் அலெக்ஸ் நோபல் என்னும் மேக்கப் மேன்தான் விஜய் சேதுபதிக்கான 75 வயது முதியவர் தோற்றத்தை கொண்டு வந்தார்.  

கொஞ்ச நேரம் மட்டுமே படத்தில் வந்தாலும் அவருக்கு அழுத்தமான கேரக்டராம். ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இடையிலான பயணத்தை கூறவிருக்கும் இப்படம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். இது விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.