5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக்! - வெளியானது விஸ்வாசம் பாடல்கள் | viswasam song released

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (16/12/2018)

கடைசி தொடர்பு:18:57 (16/12/2018)

5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக்! - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன. 

விஸ்வாசம்

`வீரம்’, `வேதாளம்', `விவேகம்' படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார் நயன்தாரா. அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார் டி.இமான். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கிராமத்து வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெற்றியின் ஒளிப்பதிவுக்கு ரூபன் படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான `அடிச்சுத் தூக்கு’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான வேட்டிகட்டுப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் 1மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது.

இந்நிலையில் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. இதில் இமான் ஒரு பாடலை பாடியுள்ளார். விவேகா, தாமரை, அருண்பாரதி உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். நாட்டுபுற இசைக்கலைஞர்களான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் `தங்கா தங்கா’ பாடலை பாடியுள்ளனர். இதுதவிர, ஸ்ரேயா கோஷல், சித்ஸ்ரீராம், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர்.