"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்!" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி | Ajith was special at Age 8 itself, says Sid Sriram after singing for Viswasam

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/12/2018)

கடைசி தொடர்பு:08:24 (17/12/2018)

"8 வயதிலேயே எனக்கு அஜித் சார் ஸ்பெஷல்!" - 'விஸ்வாசத்தில்' பாடிய சித் ஸ்ரீராம் நெகிழ்ச்சி

அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சில மணி நேரத்துக்கு முன்பு வெளியாகியிருந்தது. இமான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல்களில், 'கண்ணான கண்ணே' என்ற பாடலைப் பாடியுள்ளார், சித் ஸ்ரீராம். இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார் தாமரை. 

சித் ஸ்ரீராம்

இந்தப் பாடல் தனக்கு ஏன் மிகவும் நெருக்கமானது என்பதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 8 வயதாக இருக்கும்போது நடத்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி நெகிழ்ந்தார். அந்தப் பதிவில்,  "எனக்கு 8 வயதிருக்கும். அஜித் சார் பெசன்ட் நகரில் இருக்கும் எங்கள் தாத்தாவின் வீட்டின் முன் ஷூட்டிங்கில் இருந்தார். முதல் தளத்தில் இருக்கும் ஜன்னலின் வழியே  அதைப் பார்த்து நானும், எனது குடும்பத்தினரும் உற்சாகம் தாளாமல் கூச்சலிட்டுக்கொண்டிருந்தோம். இதைப் பார்த்த அவர், எங்களைக் கீழே வந்து போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு  சைகைகாட்டினார். இப்போது, இந்த பாடல் பாடுவதன்மூலம் ஒரு முழு வட்டத்தை நிறைவுசெய்யும் உணர்வு எனக்குக் கிடைக்கிறது" என்று அவர் கூறியிருந்தார். 

ஆங்கில ட்வீட் கீழே,
சித் ட்வீட்

இதுதான், நடிகர் அஜித் படம் ஒன்றில் சித் ஸ்ரீராம் பாடும் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க