Published:Updated:

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

நாட்டுநடப்பு

கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், ‘சண்டக்கோழி’. இயக்குநர் லிங்குசாமி - நடிகர் விஷால்- இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் கூட்டணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ‘சண்டக்கோழி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அதே கூட்டணியின் மூலம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

விஷாலின் 25-வது திரைப்படம் என்பதால், அதற்கான இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். அதில் தனது ‘சோஷியல் ஆர்கிடெக்ட்’ அமைப்பின் மூலம் குழந்தைகளின் படிப்புக்கான நிதியுதவியையும், நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவியையும் வழங்கினார். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்துவரும் விஷால், இவ்விழாவில் 30 விவசாயிகளை மேடையிலேற்றிக் கௌரவித்தார்.

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

விழாவில் பேசிய விஷால், “துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அப்படங்கள் மூலமாக வசூலான தொகையில், ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்குக் கொடுப்பதாக அந்தச் சமயத்தில் அறிவித்திருந்தேன். கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் அத்திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

அதனால், பத்து லட்ச ரூபாயைப் பிரித்து விவசாயிகளுக்கு வழங்குகிறேன். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவியைச் செய்கிறேன். நான் விவசாயிகளுக்கு உதவுவதைப் பார்த்து மற்றவர்களும் உதவ வாய்ப்பிருக்கிறது. அனைவரும் விவசாயிகளுக்கு உதவி, அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்ய வேண்டும். இந்த உதவித் தொகையை எனது கையால் கொடுப்பதைவிட, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தின் இயக்குநரும், விவசாயியுமான பாண்டிராஜ் கையால் கொடுப்பதுதான் சிறந்தது என நினைக்கிறேன்” என்ற விஷால், இயக்குநர் பாண்டிராஜை மேடைக்கு அழைத்தார். இயக்குநர் பாண்டிராஜ் மேடையேறி, விவசாயிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். அத்தருணத்தில் எழுந்த கைதட்டல் ஓசை அரங்கையே அதிரச் செய்தது.

விழாவில் பேசிய பாண்டிராஜ், “விஷால் எதற்காக என் கையால் விவசாயிகளிடம் உதவித்தொகையை வழங்கச் சொன்னார் என எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. விவசாயிகளுக்கு உதவுவதற்கு நல்ல மனம் வேண்டும்” என்றார்.

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, “எண்ணத்தை எழுத்தாக்கிப் படைப்பாக்கி காட்சியாக்கும் மேடையில், உழைப்பாளிகளைப் பாராட்டுகிறீர்கள். அதற்கு நான் விவசாயியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு உதவி செய்யும் இருக்கும் இந்தச் ‘சண்டக்கோழி’ திரைப்படம் வெற்றிபெற வேண்டும். ரத்தம் சிந்தினாலும், உயிரைக் கொடுத்தாவது போராடுவதுதான், சண்டைக்கோழியின் குணம். விவசாயிகளுக்கு உதவுவதற்காக, சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்காக அரசியல் களத்தில் சண்டக்கோழி சண்டையிட வேண்டும். அதற்கு உழவர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிர்வாகத்தினர் நலிந்த மற்றும் கஷ்டப்படும் சில விவசாயிகளைப் பரிந்துரைக்குமாறு பசுமை விகடனிடம் கேட்டிருந்தனர். அதன்படி உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அசோலா பயன்பாட்டைப் பெருக்குவதில் ஆர்வமாகச் செயல்பட்டு வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோலா பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளியாக இருந்தும் விவசாயம் செய்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், ஏழ்மை நிலையிலும் விவசாயம் செய்து வரும் உத்தரமேரூர் பரத்  ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிதியுதவி பெற்றனர். இவர்களைத் தவிர நலிந்த விவசாயிகள், பொதுமக்கள் என 27 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.

“இன்னும் ஆயிரம் வாழையை நடுவேன்!”

நிதிஉதவி பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயியிடம் பேசினோம். “விஷால் கொடுத்த நிதி உதவி எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். இப்போ தோட்டத்துல ஆயிரம் வாழைங்க இருக்கு. இந்தக் காசுல இன்னும் ஆயிரம் வாழை நடுவேன்.

விவசாயிகளைச் சிறப்பித்த விஷால்!

முருகன்

என்னைப்போல நலிஞ்ச விவசாயிகளுக்கு உதவி செய்ய முன் வர்றதே பெரிய விஷயம். இவர் அடிக்கடி எங்களுக்காகக் குரல் கொடுக்குறார். இப்போ நிதிஉதவி செஞ்சுருக்கார். விவசாயிகளுக்கு உதவி செய்யுறவங்க என்னைக்கும் அழிஞ்சு போக மாட்டாங்க” என்றார், நெகிழ்ச்சியுடன்.

- துரை.நாகராஜன்