Published:Updated:

`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்!'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்

வீ கே.ரமேஷ்
`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்!'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்
`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்!'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்
`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்!'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்

``அறிவியல் வளர்ச்சியில் விட்டில் பூச்சிகளைப் போல் நாங்கள் அழிக்கப்பட்டதால் எங்களை நம்பி வாழ்ந்த குடும்பமும், குழந்தைகளும்  நிர்க்கதியற்று அநாதைகளாக நிற்கிறோம். அரசும், நடிகர் சங்கமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்'' என்று சேலம் கலெக்டர் அலுவலகப் படியேறி இருக்கிறார்கள் திரைப்படக் கருவி இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். 

இதுபற்றி சேலம், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திரைப்படக் கருவி இயக்குநர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மர்பிதுரை, ``சின்ன வயதிலேயே சினிமாவின் மீதும், நடிகர்கள் மீதும் இருந்த மோகத்தால் எப்படியாவது சினிமாத் துறைக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அலைந்து திரிந்த எங்களுக்கு இறுதியாகக் கிடைத்தது சினிமா ஆப்பரேட்டர்கள் பணி.

`நாங்கள் அழிக்கப்பட்டதால் அநாதைகளாக நிற்கிறோம்!'- சினிமா ஆப்பரேட்டர்கள் கண்ணீர்

நேற்று தியேட்டர்களுக்குள் புகுந்தது மாதிரி இருக்கு. ஆனால், ஒவ்வொரு ஆப்பரேட்டருக்கும் அரை ஆயுட்காலம் தியேட்டருக்குள்ளேயே கழிந்துவிட்டது. தியேட்டர் ஆப்பரேட்டராக இருந்த வரை குடும்பம், குழந்தை, உடல் நலம், இரவு பகல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிச்சர் ரோல் சுற்றிச் சுற்றி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களின் படத்தையும் வெற்றிப்படங்களாக உருவாக்கியதில் கடுகளவு எங்களுடைய உழைப்பும் இருக்கிறது.

சினிமாத்துறை மீது இருந்த ஆசையால் குறைந்த சம்பளத்தையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்தோடு பணியாற்றி வந்தோம். இந்நிலையில் தான் குருவித் தலையில் பனங்காய் விழுந்ததைப் போல 2016-ம் ஆண்டு தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமா ஆப்பரேட்டர்கள் இல்லாமல் க்யூப் மூலம் திரைப்படங்கள் திரையிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நாங்கள் ஒட்டு மொத்தமாகத் திரையரங்குகளிலிருந்து அகற்றப்பட்டோம்.

நாங்கள் நேசித்த எந்த நடிகர்களின் படத்தை 100 முறை 200 முறை ஓட்டி மகிழ்ந்தோமோ அந்த நடிகர்களின் படத்தை தற்போது ஒருமுறைகூட பார்க்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். அதனால் எங்களை நடிகர்கள் சங்கத்தில் கடைநிலை உறுப்பினர்களாகச் சேர்த்து எங்கள் வாழ்வு மேம்பட நடிகர் சங்கமும், தமிழக அரசும் உதவி செய்திட வேண்டும்'' என்றார் கண்ணீருடன்.