வில் ஸ்மித் ஜீனியாக கலக்கும் 'அலாதீன்' - வைரல் ஃபர்ஸ்ட் லுக் #Viral | First look of 'Aladdin' reveals the look of Will Smith as 'Genie'

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:01 (20/12/2018)

வில் ஸ்மித் ஜீனியாக கலக்கும் 'அலாதீன்' - வைரல் ஃபர்ஸ்ட் லுக் #Viral

சமீபகாலங்களில் பல பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களை மீண்டும் ரீமேக் செய்து லைவ் ஆக்ஷன் படங்களாக எடுத்துவருகிறது டிஸ்னி நிறுவனம். இந்த வரிசையில் பிரபல `அலாதீன்' படமும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருந்தது டிஸ்னி. அற்புத விளக்கையும், ஜீனியையும் திரும்பப்பார்க்கப்போகிறோம் என ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படங்களை இயக்கிய கய் ரிட்சிதான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தப் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் பிரபல அமெரிக்க இதழான 'என்டேர்டைன்மெட் வீக்லி'-யில் தற்போது வெளியாகியுள்ளது.

அலாதீன்

இதில் அற்புத விளக்கில் இருந்து வெளிவரும் பூதம் ஜீனியாக நடித்துள்ள பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் லுக் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்னொரு பக்கம் ஜீனி ஏன் நீள நிறத்தில் இல்லை என்ற கேள்வியையும் ரசிகர்கள் பலரும் கேட்டுவருகின்றனர். இது மட்டுமல்லாமல் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு மேக்கிங் வீடியோவும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேனா மஸ்ஸாயூத், நவோமி ஸ்காட் போன்ற மற்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகவுள்ளது. இன்னொரு பிரபல டிஸ்னி அனிமேஷன் படத்தின் ரீமேக்கான 'தி லயன் கிங்' படமும் அடுத்த வருடம்தான் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க