பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு விழா- வைரலாகும் புகைப்படங்கள் | Nick Jonas - Priyanka Chopra's reception at Mumbai goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (20/12/2018)

கடைசி தொடர்பு:11:01 (20/12/2018)

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு விழா- வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில்தான் நிக் ஜோனஸ்-ப்ரியங்கா சோப்ரா திருமணம் ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனையில் இந்து-கிறிஸ்தவம் என இரண்டு முறைப்படியும் மிக பிரமாண்டமான முறையில் நடந்துமுடிந்தது. நேற்று நெருங்கிய நண்பர்கள், உறவுகள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கான திருமண வரவேற்பு விழாவை மும்பையில் ஏற்பாடு செய்திருந்தது இந்த ஜோடி.

பிரியங்கா சோப்ரா

இது ஜூஹூவில் இருக்கும் JW Marriot-யில் நடைபெற்றது. இது இவர்கள் நடத்தும் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஏற்கெனவே டிசம்பர் 4 அன்று டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்படப் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் உடனடியாக வைரலாகத் தொடங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களுக்காக மற்றுமொரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாரூக் கான் போன்ற முக்கிய பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப்பின் தேனிலவு பயணத்திற்காகப் புத்தாண்டின்போது சுவிசர்லாந்து செல்கின்றனர் இந்த  நிக்- ப்ரியங்கா தம்பதியினர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#priyankachopra and #nickjonas at their reception for family, corporates and 20 media persons @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

நீங்க எப்படி பீல் பண்றீங்க