`அவன் ஒரு மதம்பிடித்த யானை'- வரவேற்பைப் பெறும் விக்ரம் பிரபுவின் `அசுரகுரு' டீசர்! | vikram prabhu's Asuraguru Movie Teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (22/12/2018)

கடைசி தொடர்பு:12:01 (22/12/2018)

`அவன் ஒரு மதம்பிடித்த யானை'- வரவேற்பைப் பெறும் விக்ரம் பிரபுவின் `அசுரகுரு' டீசர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த படமாகத் தயாராகி உள்ள `அசுரகுரு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

விக்ரம் பிரபு

`துப்பாக்கிமுனை' படத்துக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு'. இப்படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மகிமா நம்பியார்

ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது. அதில், விக்ரம் பிரபு கொள்ளையனாக நடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

அசுரகுரு

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ல், சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக, கடந்த ஒரு வருட காலமாக தனிப்படை போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதை மையமாக வைத்து த்ரில்லர் அம்சத்துடன் இந்தப் படம் உருவாகியுள்ளது. டீசர் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க