வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (24/12/2018)

கடைசி தொடர்பு:07:30 (24/12/2018)

``முக்தியடைஞ்ச பிறகும் மூக்குப்பொடிச் சித்தர் ஆசி தந்தார்ண்ணே!" - ‘முள்ளும் மலரும்' முனீஸ்ராஜா

`நாதஸ்வரம்’ சீரியலில் ’சம்பந்த’மாக காமெடி ரோலில் அறிமுகமான முனீஸ்ராஜா, ‘முள்ளும் மலரும்’ தொடரில் ஹீரோ ஆனாலும் ஆனார், அன்றிலிருந்து கேரியரில் ஏறுமுகம்தான். சினிமா வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கி, தற்போது ‘தேவராட்டம்’, காதல் முன்னேற்றக் கழகம்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என கையில் மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

முனீஸ் ராஜா

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் இவரின் பிறந்த நாள். பௌர்ணமி தினமாகவும் இருந்ததால், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் முடித்துவிட்டுத் திரும்பியவரின் முகத்தில் செம உற்சாகம்.

வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

முனிஸ் ராஜா

``கிரிவலம் போயிட்டிருந்தப்ப எதேச்சையா நடந்த ஒரு சம்பவம், மனசை ரொம்பவே நெகிழ வச்சிடுச்சுண்ணே. வேற ஒண்ணுமில்ல, அங்க மூக்குப்பொடிச் சாமியார் இருந்தாரில்லையா, அரசியல் தலைவர்கள், நடிகர்கள்லாம் போய் ஆசி வாங்குவாங்களே, அவரேதான். அவர் இறந்த பதினாறாவது நாள் அது. அந்த நிகழ்ச்சியில் இருந்த அவரோட குடும்பத்து ஆட்கள், என்னை அந்த வழியில் பார்த்ததும் ஆசையாப் பேச வந்தாங்க. அவங்கெல்லாம் என்னோட சீரியல் ஃபேன்ஸாம். ஆசிரமத்துக்குள்ள வந்து போகச் சொல்லிக் கூப்பிட்டாங்க. உலகம் முழுக்க இருந்து பெரிய பெரிய ஆளுங்க பார்க்க வந்த ஒரு மகான் குடும்பத்துக்காரங்க, என்னை விரும்பி அவங்க இடத்துக்கு கூப்பிடறாங்கன்னா, அது சாதாரண விஷயமாண்ணே!

முனீஸ் ராஜா

முக்தியடைஞ்ச பிறகு விண்ணுலகத்துல இருந்து அவர் எனக்குத் தந்த ஆசியாகவே இந்தச் சம்பவத்தை நான் நினைக்கிறேண்ணே’ என்கிறார் முனீஸ்.